செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 25 நவம்பர் 2022 (16:02 IST)

ஆஸ்கர் விருதுக்கு சென்ற ‘லாஸ்ட் பிலிம் ஷோ’… பிரபல ஓடிடியில் ரிலீஸ்!

இந்தியாவின் சார்பில் அமெரிக்காவின் ஆஸ்கர் விருது விழாவுக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்து அனுப்பப்பட்டுள்ள திரைப்படம் தி லாஸ்ட் ஷோ.

இந்த ஆண்டு யாரும் எதிர்பாராத விதமாக குஜராத்தி திரைப்படமான “செல்லோ ஷோ” என்ற படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட உள்ளது.  விருதுக்கான இந்தியாவின் பரிந்துரை படங்களின் பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் படமும் இடம்பெற்றிருந்தது. ஆனால் இந்திய அரசின் சார்பில் ”செல்லோ ஷோ (Chhello Show)” என்ற குஜராத்தி படம் ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது.

குஜராத்தி படமான இந்த படம் தென்னிந்தியாவில் பெரிய அளவில் கவனத்தைப் பெறவில்லை. இந்நிலையில் இப்போது இந்த திரைப்படம் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது. இதை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.