செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 29 ஜூன் 2020 (07:48 IST)

வனிதாவின் மூன்றாம் திருமணம் குறித்து நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் காட்டம்!

நடிகை வனிதா மற்றும் பீட்டர் பால் ஆகிய இருவருக்கும் நேற்று கிறிஸ்தவ முறைப்படி சர்ச்சில் திருமணம் நடந்த நிலையில் பீட்டர் பால் மீது அவருடைய முதல் மனைவி எலிசபெத் ஹெலன் என்பவர் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்து பெரும் பரபரப்பு ஏற்படுத்தினார்.

பீட்டர் பால் என்பவருக்கும் எலிசபெத் ஹெலன் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கருத்துவேறு காரணமாக இருவரும் கடந்த 7 வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனக்கு முறையாக விவாகரத்து கொடுத்துவிட்டு தான், வனிதாவை திருமணம் செய்யவிருப்பதாக ஹெலனிடம் பீட்டர்பால் கூறி இருந்ததாக தெரிகிறது. ஆனால் விவாகரத்து அளிக்கும் முன்னரே வனிதாவை அவர் திருமணம் செய்து கொண்டதாக எலிசபெத் கேலன் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இது குறித்து வனிதா கூறும்போது, வனிதா விஜயகுமார் என்ற பெயரைக் கேட்டாலே சிலர் அதை வைத்து விளம்பரம் தேட நினைக்கிறார்கள். பீட்டரின் முதல் மனைவியும் ஒரு பெண் தான். இந்த நேரத்தில் அவரைப் பற்றி நான் குறை கூற விரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் யாரோ தூண்டிவிட்டு ரூ.1கோடி பணம் பறிப்பதற்காக இப்படி ஒரு புகார் கொடுத்திருக்கிறார். அதை நங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம்” என கூலாக கூறினார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சொல்வதெல்லாம் உண்மை புகழ் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "நான் இப்பொழுது தான் இந்த செய்தியை பார்த்தேன். அந்த நபருக்கு ஏற்கனவே கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இன்னும் விவாகரத்து ஆகவில்லை. படிப்பும், புகழ் வெளிச்சம் உள்ளவர் எப்படி இதுபோன்ற ஒரு தவறை செய்ய முடியும் ? அதிர்ச்சியடைந்தேன். வனிதா மற்றும் பீட்டர் பாலின் திருமணம் முடியும் வரை அவர் ஏன் காத்திருந்தார். ஏன் திருமணத்தை நிறுத்தவில்லை ?  என்று கேள்வி எழுப்பி இரண்டு தரப்பிலும் உள்ள குற்றத்தை கேள்வி கேட்டுள்ளார்.