திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 12 அக்டோபர் 2021 (15:50 IST)

மனநலம் பாதிக்கப்பட்டவராக லட்சுமி மேனன்… மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

லட்சுமி மேனன் நடிப்பில் புதிதாக ஏஜிபி என்ற படம் உருவாகி வருகிறது.

தமிழில் சுந்தரபாண்டியன் படம் மூலமாக அறிமுகமான லட்சுமி மேனன், அதன் பின்னர் பல படங்களில் நடித்தார். அவற்றில் பெரும்பாலான படங்கள் ஹிட் படங்களாக அமைந்தன. இந்நிலையில் ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு இப்போது அவர் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் ஏஜிபி என்ற த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மிரட்டலான போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அவர் ஸ்கிசோஃப்ரினியா என்ற மனநல பிரச்சனையால் பாதிக்கப்பட்டவராக நடித்துள்ளார்.