1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam
Last Modified: வியாழன், 27 ஏப்ரல் 2017 (13:33 IST)

‘லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டத்துக்கு போட்டியா?

‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்துக்கு நிலவும் போட்டி, தற்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டத்துக்கும் ஏற்பட்டுள்ளது.

 
 
13 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் ஹீரோயினாகவே நடித்து வருகிறார் நயன்தாரா. வயசாக வயசாக, அவருக்கு அழகு  கூடிக்கொண்டே போகிறது. அதேசமயம், தைரியமாக சில முடிவுகளை எடுப்பதில் வல்லவர். ஹீரோயினுக்கு முக்கியத்துவம்  தரும் படங்களில் அதிகம் நடிப்பது, தான் நடித்த படங்களின் புரமோஷனுக்கு வருவதில்லை, சொந்த வாழ்க்கையில் பல அடிகள்  பட்டபோதும் மீண்டு வந்தது என நயனின் தைரியத்தைப் பாராட்ட வேண்டும். இதனால், அவரை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று  குறிப்பிடுகின்றனர் சிலர். 
 
இந்நிலையில், பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள ‘மகளிர் மட்டும்’ இசை வெளியீட்டு விழாவில், சரண்யா  பொன்வண்ணனை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று குறிப்பிட்டார் ஜோதிகா. “சரண்யா மேடம், நீங்கள் குடும்பத்தைப் பார்த்துக்  கொள்கிறீர்கள். படங்களிலும் நடிக்கிறீர்கள். அதேசமயம், டெய்லரிங் வகுப்புகள் எடுத்து பலருக்கு வேலைவாய்ப்பும் தருகிறீர்கள்.  உங்கள் இரண்டு மகள்களும் டாக்டருக்குப் படிக்கின்றனர். அந்த பிரஷரையும் தாங்கிக் கொள்கிறீர்கள். உண்மையில்  உங்களுக்குத்தான் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டம் தரவேண்டும். உங்கள் திறமையில் பாதி கூட எங்களுக்கு இல்லை” என்று  பேசினார் ஜோதிகா. 
 
ஏற்கெனவே த்ரிஷாவையும் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று ஒருசிலர் கூறிவருகின்றனர். இந்நிலையில், அந்தப் பட்டத்துக்கு  மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.