குற்றம் 23 முதல் நாள் வசூல்
அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள குற்றம் 23 படம் நல்ல ஓபனிங்கை பெற்றுள்ளது.
என்னை அறிந்தால் படத்துக்குப் பிறகு, தமிழில் நாயகனாக மட்டுமே நடிப்பது என்பதில் உறுதியாக இருந்து, அருண் விஜய் ஒப்புக் கொண்ட படம், குற்றம் 23. ராஜேஷ்குமாரின் கதையில் தயாரான இந்தப் படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் முதல்நாளில் சுமார் ஒரு கோடியை இந்தப் படம் வசூலித்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஒரு வாரத்துக்கு வசூல் இப்படியே இருந்தால் படம் போட்ட முதலை எடுத்துவிடும் என்கிறார்கள்.
அருண் விஜய்யுடன் மகிமா நம்பியார், அபிநயா, தம்பி ராமையா ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.