ஐ.பி.எஸ். அதிகாரியாக நடிக்கும் பிரசன்னா


cauveri manickam| Last Modified வியாழன், 27 ஏப்ரல் 2017 (12:53 IST)
பிரசன்னா ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில். ஐ.பி.எஸ். அதிகாரியாக நடிக்கிறார்.

 
 

ஐ.பி.எஸ். பயிற்சி முடித்து பணிக்குச் சேரும் முதல் நாளே, மிகப்பெரிய கேஸ் ஒன்று விசாரணைக்காக பிரசன்னாவிடம் வருகிறது. துடிப்புமிக்க இளம் போலீஸ் அதிகாரியான அவர், அந்த விசாரணையை எப்படி மேற்கொள்கிறார் என்பதுதான் கதை.
 
கவிஞரும், பாடலாசிரியருமான குட்டி ரேவதி, இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இவர் ஏற்கெனவே ‘மரியான்’ படத்தில் இயக்குநர் பரத் பாலாவுடன் பணியாற்றியவர். அத்துடன், அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘எங்க போன ராசா…’ மற்றும் ‘நெஞ்சே எழு…’ பாடல்களையும் இவர்தான் எழுதியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :