1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Suga)
Last Updated : சனி, 14 அக்டோபர் 2017 (14:08 IST)

நடிகையின் ஸ்டேட்மெண்டால் அலறிய கோடம்பாக்கம்...

நடிகை விட்ட ஒரு ஸ்டேட்மெண்டால், கோடம்பாக்கமே அலறிவிட்டது.


 
 
பாலிவுட்டைச் சேர்ந்த ஒரு நடிகை, தென்னிந்திய சினிமாவில் சான்ஸ் தருவதென்றால் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று பரபரப்பு ஸ்டேட்மெண்ட் ஒன்று கொடுத்தார். 
 
இத்தனைக்கும் நான்கைந்து படங்கள்தான் தென்னிந்திய சினிமாவில் அவர் நடித்துள்ளார். நான் அட்ஜட்ஸ் செய்யாததால்தான் எனக்கு தென்னிந்திய சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கூறினார்.
 
பல படங்களில் ஹீரோயினாக நடித்து, பிற்காலத்தில் ஒரு பாட்டுக்கும் குத்தாட்டம் போட்டு, அரசியலில் இறங்க தீவிரமாகக் காய் நகர்த்தி வரும் ஒரு நடிகையிடம் இதுபற்றிக் கேட்டபோது, ‘ஆமாம்… படுக்கைக்கு அழைப்பது உண்மைதான்’ என்று சொல்லியிருக்கிறார். இவரது பேச்சைக் கேட்டு அதிர்ந்துபோன கோடம்பாக்கம், ‘நல்லவேளை… பேரைச் சொல்லாமல் விட்டாரே’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டதாம்.