கமல்ஹாசனை நேருக்கு நேராக எதிர்க்கும் நயன்தாரா
நடிகர் கமல்ஹாசன் நடித்த 'விஸ்வரூபம் 2' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த படத்துடன் மோத விரும்பாததால் வேறு எந்த படமும் அதே தேதியில் ரிலீஸ் செய்யும் அறிவிப்பு நேற்றுவரை வெளியாகவில்லை
இந்த நிலையில் சற்றுமுன்னர் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' திரைப்படம் அதே ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கமல் தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
விஸ்வரூபம் 2' படத்திற்கு இணையான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் 'கோலமாவு கோகிலா' என்பதால் சுதாந்திர தின விடுமுறை வசூல் தற்போது இரண்டாக பிரியும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மேலும் முதல்முறையாக கமல்ஹாசன் படத்தை எதிர்த்து நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் ஒன்று நேருக்கு நேராக மோதுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
நயன்தாரா, யோகிபாபு, ஜாக்குலின் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.