பிரமாண்ட சொகுசு கார் வாங்கிய கேஜிஎப் ஹீரோ - விலை மட்டும் கேட்டுடாதீங்க!
யாஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியான படம் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் சாப்டர் 2. சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த பாகத்திற்கான லீடும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் யாஷ் இப்போது இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நடிகராகியுள்ளார் யாஷ். இனிமேல் அவர் பேன் இந்தியா திரைப்படங்களில் மட்டுமே நடிப்பார் என்று கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தெரிவித்திருந்தார்.
மிகக்குறுகிய காலத்திலே ஸ்டார் நடிகர் அந்தஸ்தை பெற்றிருக்கும் யாஷ் தற்போது Rover Range என்ற பிரமாண்ட சொகுசு காரை வாங்கியுள்ளார். இந்த காரின் விலை மட்டும் ரூ. 2 - 4 கோடி வரும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன் வீடியோ இணையத்தில் வெளியாகி மெர்சலாக்கியுள்ளது.