செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (08:36 IST)

பிக்பாஸ் சீசன் 7-ல் சன் டிவியின் கயல் சீரியல் பிரபலம்?

பிக்பாஸ் தமிழ் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் அனைத்து சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். அவரின் ஸ்டைலுக்கு என்றே பிரத்யேகமாக ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இப்போது ஏழாவது சீசனையும் அவரே தொகுத்து வழங்க உள்ளார்.

இந்நிலையில் இப்போது ஏழாவது சீசனுக்கான போட்டியாளர்கள் தேர்வு நடந்துவருவதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சன் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் கயல் சீரியலின் நடிகை ஒருவர் இந்த ஆண்டு பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது.

ஆனால் அது யார் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. வழக்கமாக சீரியலில் நடிப்பவர்கள் தொடர்ந்து ஷூட்டிங்கில் கலந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கும். ஆனால் பிக்பாஸ் வீட்டுக்கு சென்றால் கயல் சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.