புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 3 ஜூலை 2020 (18:00 IST)

நல்லா இருக்க மாட்டீங்கடா நீங்க எல்லாம்! கவின் சாபம் யாருக்கு?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற நடிகர் கவின் அவ்வப்போது ஜாலியான, நகைச்சுவையான பதிவுகளை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வார். பெரும்பாலும் அவர் சமூக கருத்துக்களை தெரிவிப்பதில்லை.
 
ஆனால் சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 7 வயதுச் சிறுமிக்கு நடந்த கொடுமையை கண்டு கவின் கொந்தளித்துள்ளார். நல்லா இருக்க மாட்டீங்கடா நீங்க எல்லாம் என்று சிறுமியை கற்பழித்து கொன்ற கயவர்களை சாபமிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது:
 
இன்னும் எத்தனை ஹேஷ்டேக் போடணும், இன்னும் எத்தனை நியாயம் கேட்கணும். இன்னும் எவ்வளவு போராடனும். அந்த குழந்தை மாஸ்க்  போட்டு சிரிச்சுக்கிட்டு இருக்குற ஒரு போட்டோ, இன்னொரு போட்டோவை பார்க்க கூட முடியல. நல்லா நல்லா இருப்பிங்ககளா டா நீங்க எல்லாம். ஒரு குழந்தையை கற்பழித்து கொல்றதை விட பெரிய தப்பு என்ன இருக்க முடியும். பொண்ண பெத்தவன் எல்லாம் பயப்படுற மாதிரி இந்த தப்பெல்லாம் செய்றவனும் பயப்படனும் தானே. அதுக்காகவாச்சும் ஒரு சட்டம் பொறக்க கூடாதா? 
 
ஏற்கனவே வரலட்சுமி, ஜெயம் ரவி உள்பட பலர் சிறுமியின் கொடூரத்திற்கு குரல் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது