1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 27 ஏப்ரல் 2024 (14:28 IST)

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

கவின் நடிப்பில் இளன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ’ஸ்டார்’ என்ற திரைப்படம் மே பத்தாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
நடத்துற நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கவின் தனது அம்மா படித்து முன்னேற வேண்டும் என்று கூறிவரும் நிலையில் தனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று விருப்பம் இருப்பதாக கூறுகிறார். 
 
இதனால் அவரது அம்மா கவலைப்பட தனது லட்சியத்தை நோக்கி கவின் பயணம் செய்யும்போது சந்திக்கும் பிரச்சனைகள், இன்னல்கள், அவமானங்கள், காதலியை பிரிய வேண்டிய நிலை உள்ளிட்டவற்றை கலந்து ’ஸ்டார்’ ஆனாரா என்பது தான் இந்த படத்தின் கதை என்பது ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது. 
 
இதுவரை ரொமான்ஸ் மற்றும் காமெடி நடிகராக மட்டுமே கவினை அனைவரும் பார்த்த நிலையில் இந்த படத்தில் ஒரு சீரியசான நடிகராகவும் குறிப்பாக செண்டிமெண்ட் காட்சிகளில் பட்டையை கிளப்பி உள்ளார் என்பதும் தெரிய வருகிறது. 
 
மொத்தத்தில் கவினின் நடிப்பில் ஒரு புதிய பரிமாணம் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த படம் நிச்சயம் அவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Mahendran