புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 18 டிசம்பர் 2021 (15:00 IST)

திருமணம் முடிந்த கையோடு சல்மான் கான் படப்பிடிப்பில் காத்ரினா கைப்!

நடிகை காத்ரினா கைஃப் தனது காதலனான விக்கி கௌஷலை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார்.

பாலிவுட்டின் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருந்த விக்கி கௌஷல் மற்றும் காத்ரினா கைஃப் ஜோடி சில வாரங்களுக்கு முன்னர் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனை ஒன்றில் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்ததும் தேனிலவும் சென்று அவர்கள் தற்போது மும்பைத் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் அடுத்த சில நாட்களில் தொடங்கவுள்ள சல்மான் கானின் டைகர் 3 படத்தில் காத்ரினா கைஃப் நடிக்க செல்ல உள்ளார். படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு அதோடு முடிகிறது.