1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 26 ஜூன் 2020 (07:18 IST)

ரூ.1 லட்சம் மின்கட்டணம்: பிரபல நடிகை டுவிட்டரில் புலம்பல்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மின்வாரிய ஊழியர்கள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ரீடிங் எடுக்கவில்லை என்பதும் இதனை அடுத்து முந்தைய மாதக் கட்டணத்தை செலுத்தலாம் என்று அறிவுறுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பெரும்பாலானோர் முந்தைய மாதக் கட்டணத்தை செலுத்தி வந்தனர் ஒரு சிலர் கட்டணம் செலுத்தாமலும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக மின்வாரிய ஊழியர்கள் மீண்டும் ரீடிங் எடுக்க வந்தபோது வழக்கமாக வரும் மின் கட்டணத்தை விட பல மடங்கு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினார். தமிழ் நடிகர் பிரசன்னா இதுகுறித்து தனது ட்விட்டரில் ஒரு ட்வீட்டை பதிவு செய்தார். ஆனால் அதற்கு மின் வாரியம் கண்டனம் தெரிவித்து விளக்கம் அளித்த நிலையில் அவர் மீண்டும் தனது கருத்தை வாபஸ் பெற்றுக்கொண்டு வருத்தம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஜீவா நடித்த ‘கோ’ படத்தின் நாயகியான நாயகியும் நடிகை ராதாவின் மகளுமான கார்த்திகா நாயர் தனது வீட்டிற்கு ஒரு லட்சம் ரூபாய்  மின் கட்டணம் வந்திருப்பதாகவும் இது முறையற்றதாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து மகாராஷ்டிர மாநில முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனக்கு மட்டும் இன்றி தன்னைப் போலவே பலருக்கும் இது போன்று அதிகமாக மின்கட்டணம் வந்திருப்பதாகவும் அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் 
 
இந்த ட்வீட்டை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது