புதன், 1 பிப்ரவரி 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified வெள்ளி, 7 அக்டோபர் 2022 (18:23 IST)

ரஜினி, கமலுக்கு நன்றி கூறிய கார்த்தி...

Rajini Kamal
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமலுக்கு  நன்றி தெரிவித்து நடிகர் கார்த்தி ஒரு பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் மணிரத்னம். பல வெற்றிப் படங்களை இயக்கியவர், கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை சினிமாவாக இயக்கியிருந்தார்.
செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி  நல்ல வரவேற்பைப் பெற்று, ரு.300 கோடி  வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடித்தவர்களை  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் பார்த்து பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில்,  பொன்னியின் செல்வனின் வந்தியத்தேவனாக நடித்துள்ள, நடிகர் கார்த்தி தன் டுவிட்டர் பக்கத்தில், ''ரஜினி சார் உங்களிடம் இருந்து அழைப்பு வந்தது அற்புதமானது… மற்றவர்கள் செய்யும் பணிக்கு  நீங்கள் தரும் பாராட்டும் மரியாதையும் அன்பு நிறைந்ததாக உள்ளது ''எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், நடிகர் கமல்ஹாசனுக்கு ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார். அதில், ''சினிமாவில்  உயர்ந்த தரத்தை அடைய எப்போதும் எங்களுக்கு தூண்டுதலாக இருக்கிறீகள்'' எனத் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் இதற்கு லைக்குகள் குவித்து வருகின்றனர். சமீபத்தில், ரஜினிகாந்த் ஜெயம்ரவியை போனில் அழைத்துப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Edited  by Sinoj