திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 25 மே 2023 (08:35 IST)

தீபாவளிக்கு கார்த்தியின் ஜப்பான் ரிலீஸ்… இன்று ப்ரோமோ வீடியோ!

கடந்த ஆண்டில் விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் என அடுத்தடுத்து  மூன்று ஹிட்களைக் கொடுத்த பிறகு கார்த்தி நடிக்கவிருக்கும் அடுத்த படமாக உருவாகி வருகிறது ஜப்பான் திரைப்படம். இது கார்த்தியின் 25 ஆவது படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் ராஜுமுருகன் இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்க எஸ்ஆர் பிரபு தயாரித்து வருகிறார். இந்த படத்துக்கு ஜப்பான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்போது படம் நான்கு மொழிகளில் தீபாவளிப் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தில் கார்த்தியின் கதாபாத்திரத்தைப் பற்றிய ‘யார் ஜப்பான்’ என்ற ப்ரமோஷன் வீடியோவும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.