1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 13 நவம்பர் 2022 (08:31 IST)

கார்த்தி நடிக்கும் ‘ஜப்பான்’ படத்தின் முதல் லுக் போஸ்டர் எப்போ?... வெளியான அப்டேட்!

கார்த்தி நடிக்கும் ஜப்பான் படத்தின் முதல் லுக் போஸ்டர் நாளை வெளியாக உள்ளது.

விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் ஆகிய 3 படங்களை இந்த ஆண்டில் கொடுத்த பிறகு கார்த்தி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்னர் சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவி நடைபெற்றது.

இந்த படத்தை இயக்குனர் ராஜுமுருகன் இயக்க இருப்பதாகவும் ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் எஸ்ஆர் பிரபு தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு ஜப்பான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார்.

இதையடுத்து படத்தின் முதல் லுக் போஸ்டர் நாளை (நவம்பர் 14 ) ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.