1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Murugan)
Last Modified: செவ்வாய், 25 ஜூலை 2017 (18:50 IST)

'கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்துக்கு கல்தா கொடுக்கும் விஷால், கார்த்தி?

‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தில் இருந்து விஷாலும், கார்த்தியும் விலகுவதாக கூறப்படுகிறது. 


 

 
பிரபுதேவா இயக்கத்தில் கார்த்தி, விஷால் நடிப்பில் உருவாக இருந்த படம் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’. இந்தப் படத்தில், ‘வனமகன்’ ஹீரோயின் சயிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தில் இருந்து, நடிகர் சங்க கட்டிடத்திற்காக ஆளுக்கு தலா 10 லட்ச ரூபாய் தருவதாகச் சொல்லியிருந்தனர் விஷாலும், கார்த்தியும். ஆனால், இந்தப் படத்தில் இருந்து தற்போது கார்த்தியும், விஷாலும் விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
 
காரணம், ஹிந்தி மற்றும் தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார் பிரபுதேவா. அவை திட்டமிட்டபடி முடியாததால், ‘கறுப்பு ராஜா வெள்ளை ராஜா’ படம் தாமதமாகிக் கொண்டே வருகிறதாம். எனவே, விஷால் மற்றும் கார்த்தி கொடுத்த கால்ஷீட் முடிந்துவிட்டதாம். அடுத்தடுத்த படங்களில் இருவரும் கமிட்டாகியிருப்பதால், இருவருமே அந்தப் படத்தில் இருந்து விலகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.