வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 10 ஏப்ரல் 2021 (18:43 IST)

வசூலில் புதிய சாதனை படைத்த’’ கர்ணன்’’....விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கர்ணன் திரைப்படம் நேற்று ரிலீசான நிலையில் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் ‘கர்ணன். இத்திரைப்படத்தை எஸ் .தாணு தயாரித்துள்ளார்.

நேற்று தான் தமிழக அரசு திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என அறிவித்துள்ளது

இதனை அடுத்து இந்த கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டு ‘கர்ணன்’ திரைப்படத்தை இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு ரிலீஸ் செய்துள்ளார்.

இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்கள் முதற்கொண்டு ரசிகர்கள் வரை பலரும் இப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், தனுஷ் படங்களிலேயே முதல் நாள் வசூலில் கர்ணன் திரைப்படம் புதிய சாதனை படைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

எனவே  திருச்சி விநியோகஸ்தர் முருகானந்தம்  சேலம் விநியோகஸ்தர் சிவா உள்ளிட்டோர் இன்று கர்ணன் பட தயாரிப்பாளரைச் சந்தித்து அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்துதெரிவித்தனர்.