ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 10 ஏப்ரல் 2021 (15:23 IST)

கர்ணன் படத்தைப் பாராட்டிய விஜய் சேதுபதி!

நடிகர் தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான கர்ணன் படத்தினை விஜய் சேதுபதி பாராட்டியுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று காலை படம் வெளியானது. இந்நிலையில் இந்த படத்துக்கு தனுஷ் ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர். தனுஷ் படத்துக்கு இதுவரை இல்லாத முதல் நாள் வசூல் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தைப் பற்றி நடிகர் விஜய் சேதுபதி டிவிட்டரில் ‘சிறப்பான படம்…. தவற விடாதீர்கள்’ எனக் கூறியுள்ளார்.