சிவகார்த்திகேயனின் காந்தக் கண்ணழகி பாடல் செய்த சாதனை !
நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் இடம்பெற்றிருந்த காந்தக் கண்ணழகி பாடல் யுடியூபில் 10 கோடி பார்வையாளர்களை எட்டியுள்ளது.
சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடிப்பில் உருவானத் திரைப்படம் நம்ம வீட்டுப்பிள்ளை. கடந்த செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமில்லாமல் அந்த படத்தில் இடம்பெற்ற காந்தக் கண்ணழகி என்ற பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆதரவைப் பெற்றது.
சமூகவலைதளங்களில் இந்த பாடலை வைத்து டிக்டாக் வீடியோக்கள், மீம்ஸ்கள் ஆகியவை உருவாக்கப்பட்டன. இந்நிலையில் இந்த பாடல் தற்போது யுடியூபில் 10 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை 10 பாடல்கள் மட்டுமே 10 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.