“என் படத்தை பார்த்த முதல்வரால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை” –கங்கனா நெகிழ்ச்சி!
பாலிவுட்டின் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். சக பாலிவுட் கலைஞர்கள் பலரையும் பற்றி கடும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இதனால் பல முன்னணிக் கலைஞர்கள் இவரோடு இணைந்து பணியாற்ற விரும்புவதில்லை. ஆனால் ஆளும் பாஜக அரசுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வருகின்றார் கங்கனா.
கங்கனா கதாநாயகியாக நடித்த தேஜஸ் திரைப்படம் ராணுவப் பின்னணியில் உருவாகி கடந்த 27 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்துக்கு ரசிகர்களின் ஆதரவு இல்லாத காரணத்தால் பல காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முதல் 3 நாட்களில் 3.8 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்த்ததாகவும், படத்தைப் பார்க்கும் போது அவரால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனவ்வும் கங்கனா தெரிவித்துள்ளார்.