வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 28 நவம்பர் 2020 (10:57 IST)

சஞ்சய் தத்தை நேரில் சென்று சந்தித்த கங்கனா ரனாவத்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத்தை நேரில் சென்று சந்தித்துள்ளார் நடிகை கங்கனா ரனாவத்.

தனது அரசியல் நிலைப்பாட்டால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார் கங்க்னா ரனாவத். இதையடுத்து அவர் தற்போது பல மொழிகளில் உருவாகி வரும் தலைவி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். படப்பிடிப்புக்காக ஹைதராபாத் வந்த அவர் தான் தங்கியிருந்த அதே ஹோட்டலில்தான் நடிகர் சஞ்சய் தத்தும் படப்பிடிப்புக்காக வந்துள்ளார் என்பதை அறிந்து அவரை நேரில் சென்று சந்தித்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சஞ்சய் தத் இப்போது படப்பிடிப்புகளில் கலந்துகொள்ள ஆரம்பித்துள்ளார். அவருடனான புகைப்படத்தை வெளியிட்ட கங்கனா ’இருவரும் ஒரே ஹோட்டலில்தான் தங்கி இருக்கிறோம் என தெரிந்ததும் அவரை சந்தித்து உடல்நலம் பற்றி விசாரித்தேன். அவர் இன்னும் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். அவர் நீண்டகாலம் ஆரோக்யமாக வாழ பிராத்திக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.