'விஸ்வாசம்' படத்தை அடுத்து அஜித்துடன் மீண்டும் மோதும் சன் பிக்சர்ஸ்?
வரும் பொங்கல் தினத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த 'பேட்ட' திரைப்படம் வெளியாகவுள்ளது. இதே தினத்தில் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் வெளியாகவுள்ளது. இரண்டு பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகவிருப்பதால் கோலிவுட் திரையுலகமே பரபரப்பில் உள்ளது.
இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படமான 'தல 59' திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது என்பதும் இந்த படம் வரும் மே 1ஆம் தேதி அஜித் பிறந்த நாளின்போது வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய 'காஞ்சனா 3' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், 2019 ஏப்ரல் மாதம் இந்த படம் வெளியாகும் என்றும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளது. இந்த படம் ஏப்ரல் 14 அல்லது ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏப்ரல் 30ல் வெளியானால் மீண்டும் அஜித் படத்துடன் மோத வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
The much awaited MUNI 4 series – KANCHANA 3 by Raghava Lawrence is nearing completion of shooting and will release in April 2019.#Kanchana3