செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 ஜூன் 2022 (16:11 IST)

லோக்கிக்கு கார்.. சூர்யாவுக்கு ரோலக்ஸ்..! – அப்போ விஜய் சேதுபதிக்கு..?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபது மற்றும் பகத் பாசில் ஆகியோர் நடித்த படம் விக்ரம்.

பேன் இந்தியா படமாக கடந்த 3ம் தேதி வெளியான இந்த படம் அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமாக நல்ல வரவேற்புடன் வசூலை குவித்துள்ளது. படம் வெளியாகி முதல் மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் 100 கோடி வசூலை தாண்டிய நிலையில் 5 நாட்களில் உலக அளவில் 250 கோடி வசூலை எட்டியுள்ளது.

விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் குஷியான கமல்ஹாசன் விக்ரம் படக்குழுவினருக்கு பரிசுகளை வாரி வழங்கி வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு புதிய லெக்சஸ் கார், உதவி இயக்குனர்கள் 13 பேருக்கு புதிய அபாச்சே பைக் என பரிசாக வழங்கி அசத்தியுள்ளார் கமல்ஹாசன்.

மேலும் படத்தில் கௌரவ தோற்றத்தில் க்ளைமேக்ஸில் சில நிமிடங்கள் தோன்றினாலும் தன் நடிப்பால் ரசிகர்களை ஆர்பரிக்க செய்தார் நடிகர் சூர்யா. இந்த படத்தில் நடிகர் சூர்யாவின் கதாப்பாத்திரம் பெயர் ரோலக்ஸ் என்பதால் ஒரு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை இன்று நேரில் சந்தித்து அன்பளித்தார் கமல்ஹாசன்.

இப்படியாக ஒவ்வொருவருக்கும் பரிசாக கொடுத்துக் கொண்டிருக்கும் கமல்ஹாசன், படத்தின் முக்கிய வில்லனான விஜய் சேதுபதிக்கு என்ன கொடுப்பார் என்று எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ரோலக்ஸ் கதாப்பாத்திரத்திற்கு ரோலக்ஸ் வாட்ச் கொடுத்தவர், வில்லன் கதாப்பாத்திரமான சந்தானம் என்னும் விஜய் சேதுபதிக்கு என்ன கொடுப்பார் என ரசிகர்கள் தங்கள் யூகங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.