திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 4 மார்ச் 2024 (08:07 IST)

ஹேராம் படத்தில் பயன்படுத்த குரங்குகளின் மண்டை ஓடுகள் குணா குகையில்தான் கிடைத்தன - கமல் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

கமல்ஹாசன் நடிப்பில் 1991ல் வெளியான படம் குணா. இந்த படத்தில் கமல்ஹாசனின் நடிப்பும், இளையராஜாவின் இசையும் இத்தனை ஆண்டுகள் கழித்தும் ரசிகர்களால் தொடர்ந்து புகழப்பட்டு வருகிறது. இந்த படத்தின் சில காட்சிகளை கோடைக்காணலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் எனும் பகுதியில் படமாக்கி இருந்தார்கள். அந்த காட்சிகள் இன்றளவும் ரசிகர்களுக்கு மெய்சிலிர்ப்பைக் கொடுத்து வருகின்றனர். அதன் பிறகு அந்த குகை குணா குகை என்றே அழைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மஞ்சும்மள் பாய்ஸ் என்ற திரைப்படம் குணா குகைக்குள் விழுந்த ஒருவரை அவரது நண்பர்கள் எப்படி உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றுகிறார்கள் என்பதை உணர்ச்சிப் பூர்வமாக காட்டியுள்ளது. படத்தின் முக்கியமான ஒரு இடத்தில் குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன் எழுதும் கடிதம் பாடல் இடம்பெற்று ரசிகர்களுக்கு கூஸ்பம்ப் தருணமாக அமைந்துள்ளது. இதையடுத்து படக்குழுவை அழைத்து பாராட்டினார் கமல்ஹாசன். படத்துக்கு தமிழகத்தில் திரைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில் மஞ்சும்மள் பாய்ஸ் படக் குழுவினரோடு குணா ஷூட்டிங்கின் போது நடந்த பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் “ஹேராம் படத்தில் நான் சில குரங்குகளின் மண்டை ஓடுகளைப் பயன்படுத்தி இருப்பேன். அது எல்லாம் எனக்கு குணா குகையில் கிடைத்தவைதாம். தவறி குகைக்குள் விழுந்துவிடும் குரங்கு குட்டிகளின் மண்டை ஓடுகள் அவை” எனக் கூறியுள்ளார்.