ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 9 மே 2022 (15:46 IST)

சிவகார்த்திகேயன் படத்தில் சாய் பல்லவி…. பிறந்தநாள் பரிசு இதுதானா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் கமல் தயாரிக்க உள்ள படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது .

இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ரங்கூன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் முக்கியமான தகவலாக சாய்பல்லவி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த அறிவிப்புதான் இன்று மாலை வெளியாகும் என சொல்லப்படுகிறது. சாய்பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அந்த தகவல் வெளியாகும் என சொல்லப்படுகிறது.