1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (14:10 IST)

நவ.7ம் தேதி அரசியல் அறிவிப்பை வெளியிடுகிறார் கமல்ஹாசன்?

நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய அரசியல் தொடர்பான அறிவிப்பை அவரது பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி வெளியிடுவார் என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


 

 
நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிரான கருத்துகளை தனது டிவிட்டர் பக்கம் மற்றும் தொலைக்காட்சி பேட்டிகளில் கூறி வருகிறார். இதனால் அவர் அரசியலுக்கு வருவார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே சமயம், தமிழக அரசியல்வாதிகள் அவருக்கு எதிரான கருத்துகளை கூறிவருகின்றனர்.
 
ஆனாலும், கமல்ஹாசன் எதற்கும் அஞ்சாமல் அரசியல் கருத்துகளை தொடர்ந்து கூறி வருகிறார். சமீபத்தில் கூட ஒரு திருமண விழாவில் கலந்து கொண்ட போது, நான் ஏற்கனவே அரசியலை தொடங்கிவிட்டேன். அது டிவிட்டரில் தொடங்கினால் என்ன? கோயம்புத்தூரில் தொடங்கினால் என்ன? என அதிரடியாக செய்தியாளர்களிடம் கேட்டார். 
 
அதன் பின் அந்த திருமணவிழாவில் பேசிய அவர் “இந்த அரசியலை இப்படியே விட்டு விடக்கூடாது. இதை மாற்றுவது நம் கடமை. தேவைப்பட்டால் கோட்டையை நோக்கி செல்வோம். கோபத்தை தேர்தலின் போது காட்டுங்கள். நான், நேரடி அரசியலுக்கு வந்துவிட்டேன்” என்றார். 
 
இந்நிலையில், வருகிற நவம்பர் 7ம் தேதி அவரது பிறந்த நாளை அவரின் ரசிகர்கள் கொண்டாடவுள்ளனர். அன்று கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசம் பற்றி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என அவரின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.