ஒளிப்பதிவு சட்டத்திருத்த சட்டம்… கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு!
நடிகரும் இயக்குனருமான கமல்ஹாசன் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள ஒளிப்பதிவு சட்டதிருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசு ஒளிப்பதிவு திருத்த சட்டம் 2021 என்பதைக் கொண்டு வந்துள்ளது. இந்த திருத்தத்தின் மூலம் ஒன்றிய அரசு நினைத்தால் சென்சார் செய்யப்பட்ட ஒரு திரைப்படத்தைக் கூட மறுபடியும் சென்ஸார் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சினிமாத்துறையினர் மத்தியில் கடுமையான எதிர்ப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில் நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கண், வாய், காதுகளை அடைத்துக் கொண்டு இருக்கும் இந்தியாவின் மூன்று குரங்கு சின்னங்களாக ஒரு போதும் சினிமா, ஊடகம் மற்றும் கல்வி இருக்காது. அதன் சுதந்திரத்தை நசுக்கப் பார்த்தால் அது மிகப்பெரிய பாதிப்பையே உண்டாக்கும். இந்த சட்டத்திருத்தை எதிர்த்து அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்