பொன் முட்டையிடும் வாத்தாக மக்களை நினைக்கிறது அரசு: கமல்ஹாசன் டுவிட்
பொன் முட்டையிடும் வாத்தாக மக்களை அரசு நினைக்கிறது என கமல்ஹாசன் இதுவரை பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த ஆறு மாதங்களாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது என்ற நிலையில் இன்று மீண்டும் ரூபாய் 25 உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது
ஏற்கனவே ரூபாய் 850.50 என்ற விலையில் சமையல் கேஸ் விலை இருந்த நிலையில் இன்று ரூபாய் 25 உயர்த்தப்பட்டதால் 875.50 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. இந்த நிலையில் சமையல் கியாஸ் உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
மேலும் ரூ.25 உயர்ந்திருக்கிறது சமையல் எரிவாயு. பொன் முட்டையிடும் வாத்தாக மக்களை நினைக்கிறது மத்திய அரசு. இனியும் பொறுக்கமாட்டார்கள் அப்பாவி மக்கள். ஜாக்கிரதை! என்று பதிவு செய்துள்ளார்.