செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 31 டிசம்பர் 2022 (15:22 IST)

கமல் ராஜமௌலி திடீர் சந்திப்பு… விரைவில் மிகப்பெரிய அப்டேட்!

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ராஜமௌலி சந்திப்பு சமீபத்தில் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய்தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்த படம் ஆர்.ஆர்.ஆர். உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்தது இந்த படம். இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கான போட்டி பிரிவில் போட்டியிடுகிறது.

இந்நிலையில் ராஜமௌலி அடுத்து மகேஷ் பாபு நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ராஜமௌலி, கமல் சந்திப்பு சமீபத்தில் நடந்துள்ளதாகவும், விரைவில் இவர்கள் இருவரும் இணையும் படத்துக்கான பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பேச்சுவார்த்தை இரு தரப்புக்கும் பாசிட்டிவ்வான முறையில் முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.