1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 20 செப்டம்பர் 2021 (18:02 IST)

இளையராஜா-கமல்ஹாசன் சந்திப்பு: வைரல் வீடியோ!

இளையராஜா-கமல்ஹாசன் சந்திப்பு: வைரல் வீடியோ!
இசைஞானி இளையராஜாவை உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் மரியாதை நிமித்தமாக சந்தித்து உள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 
 
இசைஞானி இளையராஜா மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் நீண்ட கால நண்பர்கள் என்பது தெரிந்தது. அந்த வகையில் அடிக்கடி இருவரும் சந்தித்து தங்களுடைய எண்ணங்களை பரிமாறிக் கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
கடவுள் கொள்கையில் இருவரும் இரு வேறு கருத்துக்களைக் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களது நட்பில் எந்தவிதமான இடையூறும் ஏற்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று இளையராஜாவின் ஸ்டுடியோவுக்க்கு கமல்ஹாசன் வருகை தந்தார் அவரை வரவேற்ற இளையராஜா உள்ளே அழைத்துச் சென்றார் இருவரும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டனர்
 
இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என இரு தரப்பினரிடம் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசன் தற்போது விக்ரம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் அடுத்ததாக பிக்பாஸ் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது