கமல்ஹாசனுடன் கீர்த்திசுரேஷ் சந்திப்பு
கீர்த்தி சுரேஷ் நடித்த 'நடிகையர் திலகம் திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக கீர்த்திசுரேஷின் நடிப்பை புகழாதவர்களே இல்லை என்று கூறலாம். சாவித்திரியின் நடிப்பை தத்ரூபமாக வெளிப்படுத்திய கீர்த்திசுரேஷூக்கு தேசியவிருது கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் இன்று கீர்த்திசுரேஷை அழைத்து தனது பாராட்டுதல்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியுள்ள கீர்த்திசுரேஷ், கமல்ஹாசன் அவர்களது வாழ்த்துக்கள் தனக்கு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றும் அவருக்கு தனது நன்றிகள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் கீர்த்திசுரேஷின் நடிப்பை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் தனது டுவிட்டரில் பாராட்டியுள்ளார். நடிகையர் திலகம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.