வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 20 ஜூன் 2024 (15:09 IST)

கள்ளச் சாராயம் விவகாரம்: அரசுக்கு அறிவுரை சொன்ன கமல்ஹாசன்..!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை விடுவிக்க மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ள செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிகிச்சை பெறுவோர் விரைவில் நலமடையை விழைகிறேன். 
 
தமிழ்நாட்டில் இப்படியொரு துயரம் இனியொரு முறை நிகழாத வண்ணம் கள்ளச்சாராய வியாபாரிகளைத்  தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர்கள் இதிலிருந்து விடுபடுவதற்கான மறுவாழ்வு மையங்கள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும். 
 
போதைக்கு எதிரானப் போரில் நாம் ஒவ்வொருவருமே ஈடுபட வேண்டிய தருணம் இது.
 
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva