1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (08:21 IST)

மீண்டும் இணைகின்றனர் கமல்ஹாசன் - மோகன்லால்

கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' மற்றும் 'சபாஷ் நாயுடு' ஆகிய திரைப்படங்கள் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது அடுத்த படம் 'தலைவன் இருக்கின்றான்' என்பதை கமல் அறிவித்தார்



 
 
இந்த நிலையில் இந்த படம் குறித்து சில தகவல்கள் வெளிவந்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு அக்சயகுமார் நடிப்பில் இந்தியில் வெளிவந்த 'ஓ மை காட்' என்ற படத்தின் ரீமேக் தான் கமலின் 'தலைவன் இருக்கின்றான்' படம் என்றும் இதில் அக்சயகுமார் வேடத்தில் கமல்ஹாசனும் இன்னொரு முக்கிய வேடத்தில் மோகன்லாலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
 
ஏற்கனவே இருவரும் இணைந்து கடந்த 2009ஆம் ஆண்டு 'உன்னை போல் ஒருவன்'. என்ற படத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த படம் இருவரையும் இணைக்கும் இரண்டாவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது