வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 22 நவம்பர் 2018 (14:25 IST)

திமுகவை மிஞ்சிய கமல்ஹாசன்!

கஜா புயல் தமிழ்நாட்டையே புரட்டிபோட்டு டெல்டா மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்திவிட்டது. இதில் இருந்து மக்கள் எப்படி மீள போகிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.
 
இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் தானும் தங்கள் கட்சியும் உயிராகவும் உணர்வாகவும் உடனிருப்பதாகவும் விரைவில் நேரில் சந்திப்பதாகவும் கமல்ஹாசன் நேற்று தெரிவித்தார். 
 
அதன்படி இன்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆறுதல் கூறிய கமல், "இன்று கூட ஒரு விவசாயி தன்னுடைய தென்னை தோப்பு நாசமானதால் மனமுடைந்து விஷ மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்". 
 
இதனை கேட்டு மிகுந்த மனா வருத்தத்திற்கு ஆளான கமல் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்ததோடு கமல்ஹாசன் மற்றும்  மக்கள் நீதி மய்யம் தோழர்கள் சார்பாக 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணம் வழங்கியுள்ளார்.
 
மேலும் கஜா புயலில் சிக்கிய மொத்த மாவட்டங்களில் ரூ. 1.20 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகள் செய்யப்பட்டு உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.