1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 14 ஜூலை 2018 (16:31 IST)

திருடர்கள் காவல்துறைக்கு உதவுகிறார்கள்.... யாரை திருடரென்று கூறினார் கமல்?

திருடர்கள் காவல் துறைக்கு உதவுகிறார்கள் என கமல் பிக்பாஸ் இன்றைய புரமோவில் கூறியுள்ளார்.
பிக்பாஸின் இன்றைய புரமோ வெளியாகியுள்ளது. அதில் கமல் காவல்துறை பொதுமக்களுக்கு நண்பன், திருடர்களுக்கு பகைவன், ஆனால் இங்கே திருடர்கள் காவல் துறைக்கு உதவுகிறார்கள், பொதுமக்கள் உதறுகிறார்கள்..இங்க பிக்பாஸ்ல என கூறியிருக்கிறார்.
 
எனது அரசியல் சார்ந்த கருத்துக்களை பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளிப்படுத்துவேன் எனக் கூறியிருந்த கமல், காவல் துறையையும் தமிழக ஆட்சியாளர்களையும் தான் ஜாடையாக இப்படி வம்பிழுத்திருக்கிறார் என பலர் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.