வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 13 ஏப்ரல் 2019 (20:07 IST)

பிக் பாஸ் 3 -க்காக கமல் கேட்ட சம்பளம்! தெரிந்தால் ஆடிபோவீங்க!

கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ்.  ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி சீசன் 1 , சீசன் 2 , என்ற இரண்டு பாகமும் பட்டிதொட்டியெங்கும் பரவியது.


 
கமல் தொகுத்து வழங்கி மாபெரும் வெற்றிபெற்ற  இந்நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் எப்போது வெளியாகும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த வேளையில் இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
 
தற்போது அரசியலலில் பிஸியாகிவிட்ட கமல் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு பெறுவாரா மாட்டாரா என்ற மிகப்பெரிய கேள்வி குறியும் நிலவி வந்த நிலையில் தற்போது சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது . பிக்பாஸ் மூன்றாவது நிகழ்ச்சியை மீண்டும் கமலை வைத்து தொகுத்து வழங்க பிக் பாஸ் நடத்தும் எண்டிமால் நிறுவனம் திட்டம் தீட்டி வருகிறது. ஆனால், கமலின் சம்பளத்தை கேட்டு தான் அந்நிறுவனம் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளது 


 
பிக்பாஸ் 3 வது சீசனை தொகுத்து வழங்க ஒரு எபிசோடுக்கு ஒரு கோடி வீதம் 100 நாட்களுக்கு 100 கோடியை சம்பளமாக கேட்டுள்ளாராம் கமல் . இதனால் எண்டிமால் நிறுவனம் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனால்  பிக் பாஸ் குழு கமலை தொகுப்பாளராக போடலாமா இல்லை வேறு ஏதாவது நடிகரை வைத்து நிகழ்ச்சியை துவங்கலாம் என்று யோசித்து வருகின்றதாம்.