கலர்ஃபுல் 'கலகலப்பு 2' டீசர்: இணையத்தில் வைரல்
சுந்தர் சி இயக்கத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஓவியா நடித்த 'கலகலப்பு' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து கடந்த சில மாதங்களாக சுந்தர் சி இயக்கிய திரைப்படம் 'கலகலப்பு 2'. குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேதரின் தெரசா, வையாபுரி, மனோபாலா, ரோபோசங்கர், சந்தான பாரதி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளது. குறிப்பாக டீசர் முழுவதும் கலர்ஃபுல்லாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருவதால் நேற்றிரவு முதல் இந்த டீசர் இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.