வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 10 நவம்பர் 2014 (10:10 IST)

ஆம்பளயிலும் தொடரும் கலகலப்பு கூட்டணி

சுந்தர். சியின் வெற்றிக்கு முக்கிய காரணம் சிறந்த காமெடி நடிகர்களை தனது படத்தில் பயன்படுத்துவது. ஆரம்பகாலத்தில் கவுண்டமணியுடன் கூட்டணி அமைத்து உள்ளத்தை அள்ளித்தா போன்ற மெகா ஹிட் படங்களை எடுத்தவர் அதன்பிறகு வடிவேலுடன் கூட்டணி அமைத்துக் கொண்டார்.
அந்தக் கூட்டணி வடிவேலுவின், தன்னால்தான் எல்லாம் என்ற அகங்காரத்தால் தகர்ந்தது. அதன் பிறகு விவேக். சுந்தர். சியின் காமெடி காம்பினேஷனில் விவேக்குடனான கூட்டணிதான் மிக மோசமாக அமைந்தது. விவேக்குடன் கூட்டணி தொடர்வது கடினம்  என்ற நிலையில் கலகலப்பில் கைகோர்த்தார் சந்தானம். படமும் மிகப்பெரிய வெற்றி. அதிலிருந்து சுந்தர். சியின் படமென்றால் சந்தானமும் கண்டிப்பாக இடம்பெறுவார். கடைசியாக வெளியான அரண்மனைவரை.
 
ஆனால் ஆம்பளயில் சதீஷை மட்டுமே சுந்தர். சி பயன்படுத்தினார். அதனால் படத்தில் சந்தானம் இல்லையோ என்று பலருக்கு சந்தேகம். முக்கால்வாசி படம் முடிந்த நிலையில் சந்தானமும் ஆம்பளயில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
 
கதையில்லாமல் படம் பண்ணினாலும் சந்தானம் இல்லாமல் இனி சுந்தர். சியின் படங்களைப் பார்ப்பது கடினம்தான்.