1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By C.M.
Last Updated : புதன், 27 டிசம்பர் 2017 (16:11 IST)

காஜல் வெளிப்படையாகச் சொன்ன ‘அந்த’ ரகசியம்

தனது தாய்மொழியான ஹிந்தியில் கவனம் செலுத்தாமல் இருப்பதற்கான ரகசியக் காரணத்தை வெளிப்படையாகக் கூறியுள்ளார்  காஜல் அகர்வால்.
மும்பையைச் சேர்ந்த காஜல் அகர்வால், 2004ஆம் ஆண்டு ஒரு ஹிந்திப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். அதன்பிறகு 3 ஆண்டுகள் கழித்துதான் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ‘லட்சுமி கல்யாணம்’ என்ற தெலுங்குப்  படம்தான் அது.
 
அதன்பிறகு தமிழ்ப் படங்களிலும் நடிக்கத் தொடங்கிய காஜல் அகர்வால், கடந்த 11 வருடங்களில் இதுவரை 3 ஹிந்திப்  படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ‘தமிழ், தெலுங்கில் தான் அதிகமான வாய்ப்புகள் வருகின்றன. ஒரே நேரத்தில் மூன்று  மொழிகளிலும் கவனம் செலுத்துவது கஷ்டமான விஷயம்’ என்றும் அதற்கான காரணத்தை விளக்கியுள்ளார் காஜல் அகர்வால்.