ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 9 மே 2022 (08:54 IST)

முதல் முறையாக மகனின் புகைப்படத்தை வெளியிட்ட காஜல் அகர்வால்!

அன்னையர் தினத்தை முன்னிட்டு தற்போது காஜல் அகர்வால் தன்னுடைய மகனின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல். இந்நிலையில் கடந்த லாக்டவுனின் போது அவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அதையடுத்து கர்ப்பமான அவர், அதை ரசிகர்களுக்கு அறிவித்து, கர்ப்பகால புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். அதையடுத்து சமீபத்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த குழந்தைக்கு நீல் என பெயர் வைத்துள்ளனர். நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை காஜல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர, அது வைரலாகி வருகிறது.