திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 20 ஜனவரி 2019 (16:45 IST)

70 நிமிடங்களில் 10 கிமீ ஓடிய காஜல் அகர்வால்

மும்பையில் இன்று புகழ்பெற்ற மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் சுமார் 16 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு மொத்தம் 405,000 அமெரிக்கா டாலர்கள் பரிசளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த மாரத்தான் போட்டியில் பிரபல நடிகை காஜல் அகர்வால் 10 கிமீ தூரம் வரை கலந்து கொண்டார். அவர் இந்த 10 கிமீ தூரத்தை வெறும் 70 நிமிடங்களில் ஓடி கடந்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்த ஆண்டு 21 கிமீ தூரமுள்ள மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் என்றும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது 'பாரீஸ் பாரீஸ்' படத்தில் நடித்து முடித்துள்ள காஜல் அகர்வால் அடுத்ததாக கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் 'இந்தியன் 2' படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் ஒரு தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் நடிக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது