புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 26 டிசம்பர் 2018 (19:42 IST)

தமன்னாவுக்கு கிடைக்காதது காஜலுக்கு மட்டும் எப்படி...?

பாரிஸ் பாரிஸ் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் காஜல் அகர்வால். இதே படம் தெலுங்கில், தட் ஈஸ் மகாலட்சுமி பெயரில் உருவாகிறது. இதில் தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார்.
 
 
ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள பாரிஸ் பாரிஸ் டீசர் சமீபத்தில் வெளியானது. இதே டீசர் மலையாளம், தெலுங்கு என என இரு மொழிகளில் மஞ்சிமா மோகன் மற்றும் தமன்னாவின் நடிப்பில் வெளியானது. 
 
ஆனால், காஜல் அகர்வாலின் டீசருக்கு மட்டும் ரசிகர்கள் மத்தில் ரெஸ்பான்ஸ் அதிகமாக உள்ளது. காஜல் நடித்துள்ள ஒரு குறிப்பிட்ட காட்சி சர்ச்சைக்குள்ளாகி வைரலானது. 
 
அந்த பக்கம் தமன்னாவோ தெலுங்கில் அப்படிப்பட்ட காட்சிகளில் எல்லம் நடிக்கவில்லை. இதனால் காஜல் நடித்த டீஸர் இணைய தளத்தில் லைக்குகளை அள்ளிய நிலையில் தமன்னாவின் டீஸர் பின்தங்கியுள்ளது.