வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: சனி, 16 ஜூன் 2018 (13:03 IST)

விஜய்யைத் தொடர்ந்து ரஜினிக்காக ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்த இசையமைப்பாளர்

விஜய்யைத் தொடர்ந்து ரஜினிக்காக ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்துள்ளார் கைலாஷ் கெர்.

 
 
பின்னணிப் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் என இரண்டு முகங்கள் கொண்டவர் கைலாஷ் கெர். பல மொழிகளில் பாடியுள்ள இவர், விஜய்யின் ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற‘ஆளப்போறான் தமிழன்’ என்ற பாடலை சத்யபிரகாஷ், தீபக், பூஜாவுடன் இணைந்துபாடினார். இந்தப் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.
 
இந்நிலையில், மறுபடியும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்துள்ளார் கைலாஷ் கெர். ஆனால், இந்த முறை பாடகராக அல்ல, இசையமைப்பாளராக. கடந்த முறை விஜய்க்காக இணைந்த இருவரும், இந்த முறை ரஜினிக்காக இணைந்துள்ளனர்.
 
ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தில், பறவைகளைப் பற்றி ‘புல்லினங்கள்’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. மதன் கார்க்கி எழுதிய இந்தப் பாடலுக்கு, பம்பா சத்யா மற்றும் ஏ.ஆர்.அமீன் இருவரும் குரல் கொடுத்துள்ளனர். இந்தப் பாடலின் ஹிந்தி வெர்ஷனை, கைலாஷ் கெர்ருடன் இணைந்து உருவாக்கியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.