செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : திங்கள், 15 நவம்பர் 2021 (10:51 IST)

’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

நடிகர் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகி உள்ளது
 
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில் தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சற்று முன் வெளியாகி உள்ள இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது என்பதும் விஜய்சேதுபதியை இயக்குனர் விக்னேஷ் சிவன் ஸ்டைலிஷாக இந்த படத்தில் காண்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இந்த படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் திரையரங்குகளில் தான் இந்த படம் வெளியாகும் என்பதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது