செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (15:32 IST)

தமிழ் வருடப் பிறப்புக்கு ரிலீஸாகிறதா ‘காலா’?

ரஜினி நடித்துவரும் ‘காலா’, அடுத்த வருடம் தமிழ் வருடப் பிறப்புக்கு ரிலீஸாகலாம் எனத் தெரிகிறது.
 



பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படம் ‘காலா’. நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டில், சாக்ஷி அகர்வால், சாயாஜி ஷிண்டே, சம்பத், சுகன்யா, அரவிந்த் ஆகாஷ், பங்கஜ் திரிபாதி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். தனுஷ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

இதுவரை 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. இன்னும் சில மாதங்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டாலும், அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தமிழ் வருடப் பிறப்புக்குத்தான் படத்தை ரிலீஸ் செய்யப் போகிறார்களாம். காரணம், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.0’ படமே ஜனவரி இறுதியில் தான் ரிலீஸாகப் போகிறது. அடுத்தடுத்து ரிலீஸ் செய்தால் நன்றாக இருக்காது என்பதால் இந்த ஏற்பாடாம்.