வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (17:26 IST)

க/பெ ரணசிங்கம் ரிலீஸ் தேதி அறிவிப்பு: ஒரே நேரத்தில் ஆன்லைன், டிடிஎச் இரண்டிலும்!

கொரோனா காரணமாக நடிகர் விஜய் சேதுபதி நடித்த க\பெ ரணசிங்கம் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில் பல்வேறு திரைப்படங்கள் ஓடிடி வழியாக ஆன்லைனில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள க\பெ ரணசிங்கம் திரைப்படமும் ஓடிடி மூலமாக வெளியாக உள்ளது.

ஜீ நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ள இந்த படத்தை ஒரே சமயத்தில் டிடிஎச் மற்றும் ஓடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதன்படி அக்டோபர் 2 அன்று ஜீ ப்ளெக்ஸ் சேனல் மூலமாக ஒளிபரப்பப்படவும், ஜீ5 தளத்தில் பார்க்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த ஜீ ப்ளெக்ஸ் சேனலானது ஏர்டெல் டிஜிட்டல் டிவி, டாடா ஸ்கை, டி2எச், டிஷ் டிவி உள்ளிட்ட டிடிஎச்களில் பார்க்கும் வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது.