செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (11:59 IST)

வித்யாபாலன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜோதிகா

சுரேஷ் திரிவேணி இயக்கத்தில் கடந்த 2017 நவம்பரில் வெளியான இந்திப் படம் துமாரி சுலு. இதில் வித்யா பாலன், எப்.எம். ரேடியோவில் ரேடியோ ஜாக்கியாகிறார். இதனால் பல பிரச்சினைகளை சந்திக்கிறார். இவ்வாறு நகரும் ‘துமாரி சுலு’ படத்துக்கு இந்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து,  தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதை ராதாமோகன் இயக்க உள்ளார். இதில், வித்யாபாலன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க ஜோதிகா ஒப்பந்தமானார். ராதாமோகன் டைரக்ஷனில், ‘மொழி’என்ற  படத்தில் ஜோதிகா ஏற்கனவே நடித்து இருந்தார். அதைத் தொடர்ந்து சில வருட இடை வெளிக்குப்பின், ராதாமோகன் டைரக்ஷனில் ஜோதிகா மீண்டும்  நடிக்கிறார். இப்படத்துக்கு ‘காற்றின் மொழி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து விதார்த் முக்கிய கதாபாத்திரம் ஏற்கிறார். முதல்கட்டப் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க உள்ளது. படத்தின் ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துச்சாமி, எடிட்டராக கே.எல்.பிரவீன் ஒப்பந்தமாகியுள்ளனர். ‘போப்டா’ நிறுவனத்துக்காக ஜி.தனஞ்செயன், இந்த படத்தை  தயாரிக்கிறார்.