ஹீரோயினாக பிக்பாஸ் ஜூலி; கருத்து கூறிய நெட்டிசன்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலி முதல் முறையாக கதாநாயகியாக நடிக்க உள்ளார். ஹீரோயினாகியுள்ளதை ஜூலி மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் சமூக வலைதளங்களில் வீர தமிழச்சி என்று பெயர் பெற்ற ஜூலி பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பிரபலமானார். இதையடுத்து பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக அறிமுகமானார். அண்மையில் அப்பளம் விளம்பர படம் ஒன்றில் நடித்தார். இந்நிலையில் தற்போது முதல்முறையாக கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
தான் முதல்முதலாக நடிக்க உள்ளதை ரசிகர்களிடம் தெரிவிக்க ட்வீட்டிய ஜூலியை கலாய்த்து நெட்டிசன்கள் பலரும் ட்வீட் செய்துள்ளனர். சிலர் வாழ்த்தவும் செய்துள்ளனர். தனுஷின் மாரி 2-ஐ (Maari2) அடுத்து #JulieAsHeroine ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது. ஜூலியை வாழ்த்தியும், கலாய்த்தும் ட்வீட்டியவர்கள் #JulieAsHeroine என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தியுள்ளனர். அதில்...
இப்படத்தை K7 புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது.